ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைப்பு

கொழும்பு, ஜுன் 04

ரஸ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே  நேற்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவிற்கு சொந்தமான ஏரோஃப்ளோட் விமானம்   இரண்டு நாட்களாக இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ரஷ்யாவின் அதிருப்தி குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply