கோட்டா கோ கம விவகாரம்; பதுங்கியிருக்கும் ஜோன்ஸ்டனை தேடி சி.ஐ.டி வலைவீச்சு

கோட்டா கோ கம , மைனா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய இரு சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில், உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இந்த இரு சி.ஐ.டி. குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.

அக்குழுக்கள் குருணாகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜோன்ஸ்டனை கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக சென்றுள்ள போதும், வெள்ளிக்கிழமை ( 3) மாலை வரை அவரைக் கைது செய்ய முடியவில்லை எனவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

கடந்த மே 09ஆம் திகதி அலரிமாளிகையில் ஒன்றுகூடிய அரசாங்கம் ஆதரவாளர்கள் இடையே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆவேசமாக உரையாற்றியிருந்தார்.

அந்த உரையை விசாரணை அதிகாரிகள் பிரபல உளவள நிபுணர்களான நீல் பெர்னாண்டோ, குணதாஸ பெரேரா ஆகியோருக்கு செவிமெடுக்க செய்து விசேட அறிக்கையொன்றினை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த உரையடங்கிய இறுவட்டை அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி அறிக்கை பெற அனுமதி பெறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், குறித்த தாக்குதல்களில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக உள்ள சாட்சியங்கள் பிரகாரம், அவரைக் கைது செய்ய சி.ஐ.டி.யினர் தீர்மானித்துள்ள நிலையிலேயே, அது குறித்து நீதிமன்றுக்கும் அறிவிக்கப்பட்டு, தற்போது அவர் தேடப்பட்டு வருகின்றார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply