கிளிநொச்சியில் 5 கோடி பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி,ஜுன் 04

கிளிநொச்சி பகுதியில் 190 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சி   விவேகநந்தா நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து 5 கோடி ரூபா பெறுமதியன கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply