பேருந்து சேவைகளை குறைக்க நடவடிக்கை – டீசல் தட்டுப்பாட்டால் அவதி

டீசல் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை பேருந்து சேவைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களாக பேருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டீசல் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் இல்லை. இதனால், பேருந்துகள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

குறைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு .பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ஒரு வாரத்திலாவது டீசல் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் .இல்லை என்றால் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி முதல் பேருந்துகள் இயக்கப்படாது .மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுப்போம் என்றார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply