காத்தான்குடியில் கைகுண்டு மீட்பு

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் பின்பகுதில் நிலத்தை தோண்டும் போது அதில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை (04) குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஹோட்டலின் பின்பகுதியில் நிலத்தை தோண்டி கழிவு நீரை வௌியேற்றுவதற்காக தாங்கி ஒன்றை கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு இவ்வாறு கண்டுபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று கைகுண்டை மீட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply