கல்முனை பொது மைதானத்தில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

கல்முனை பொது மைதானத்தில் குடும்பஸ்தரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை – உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில், அவர் பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.

சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.

குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன.

சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்றது.

தற்போது, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply