யாழில் யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு ஆரம்பம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு 04.06.2022 இன்று முதல் நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

அந்தவகையில் இளைஞர் விவகார அலகின் உதவிச்செயலாளர் சிவப்பிரியா சுபாஸ்கரன் தலைமையில் ஆரம்பமாகிய இக் கற்கைநெறியானது சனி, ஞாயிறு தினங்களிலும் ,அரச விடுமுறை தினங்களிலும் காலை 6.00 மணி தொடக்கம் 8.00 மணிவரை நடைபெற்று வருகின்றன.

மேலும் இவ்வகுப்புகளில் 19 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலாரும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுவருகின்றனர்.

சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கைநெறியை பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply