தமது தவறுகளை மறைக்க வரிகளை விதித்துள்ளது கோட்டா அரசு! ஐக்கிய மக்கள் சக்தி

பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் காலதாமதம் செய்வதால் மக்களுக்கு சுமையாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தனது நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கியதன் மூலம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான துஷார இந்துனில் தெரிவித்தார்.

பாரியளவில் வரி குறைப்புகளை விதித்து தவறு செய்த அரசாங்கம், மக்கள் மீது இடது மற்றும் வலது வரி விதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனி வரி குறைப்பினால் மாத்திரம் 15,900 மில்லியன் ரூபாவை நஷ்டமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே முடங்கியுள்ள பொருளாதாரத்தில் தமது தவறுகளை மறைப்பதற்காக வரிகளை விதித்து முகத்தை காப்பாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply