நுவரெலியாவில் பலா மரங்களை வெட்டுவதற்கு தடை விதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில், பலா மரங்களை வெட்டுவதற்கு முற்று முழுதாக தடைவிதித்து நுவரெலியா மாவட்டச் செயலாயர் நந்தன கலகொட விசேட சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டே அவர் இவ்வாறான சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைவாக இனி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றும் பலா மரங்களை வெட்ட முடியாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விபத்துக்களை தடுப்பதற்காக பலா மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply