தொடரும் மர்மங்கள்; அனலைதீவில் மனித எச்சங்கள் மீட்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மர்மமான முறையில் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் யாழ் அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கடற்கரையில் கரையொதுங்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த கடற்கரைக்கு அருகாமையில் சுடலை காணப்பட்டதாகவும் அதிலிருந்து மனித எச்சங்கள் கடல் அரிப்பின் மூலம் வெளிக் கொண்டு வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

வேறு சிலர் கருத்து தெரிவிக்கையில், கடலில்  காணாமல் போனவரின் மனித எச்சங்கள் நீண்ட காலத்திற்குப் பின்னர் கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்தை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

·  Facebook : சமூகம் தமிழ் நியூஸ்

·  Twitter: சமூகம் ட்விட்டர்

·  Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்

·  YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply