வாகனம் வாங்க விரும்புவோருக்கு கவலையான செய்தி!

நாட்டில் கடந்த சில மாதங்களாக தொடரும் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இதேவேளை கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தால் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் நாடளாவிய ரீதியில் பாவித்த வாகனங்களும் கடும் விலைகளுக்கு விற்பனையாகி வருகின்றது.

இதேவேளை வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் என பல்வேறு தரப்பாலும் எதிர்வுகூறப்படுகின்றது.

அதேவேளை கடந்த சில நாட்களாக கார் டயர் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களின் விலையும் உயர்ந்துள்ளது. வாகனங்களை விற்பனை செய்யும் இணையதளங்கள் மூலம் இந்த விடயம் அறியமுடிகின்றது.

டொலர் தட்டுப்பாடும், வட் வரி உயர்வுமே இதற்கு காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகன விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த வாகன வியாபாரிகள் நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடும், வட் வரி உயர்வுமே விலை உயர்வுக்கு காரணம் என குறிப்பிடுகின்றனர்.

பிறசெய்திகள்

தொடரும் மர்மங்கள்; அனலைதீவில் மனித எச்சங்கள் மீட்பு!

விவசாயிகள் மீது அதிகாரிகளின் கடும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்-விவசாயி ஆதங்கம்!

·  Facebook : சமூகம் தமிழ் நியூஸ்

·  Twitter: சமூகம் ட்விட்டர்

·  Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்

·  YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply