ரஷ்ய விமான விவகாரம்: உயர்மட்ட நடவடிக்கையில் அரசாங்கம்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விமானம் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பான நீதிமன்ற வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் கருத்து வெளியிட்டார்.

குறித்த விமானம் தடுத்து வைக்கப்பட்டமையினால் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை ஏற்படவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

Leave a Reply