நாளையதினம் முற்றாக முடங்கும் பேருந்து சேவை!

நாட்டில் சில பகுதிகளில் நாளையதினம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முன்னெடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் முழுமையாக பேருந்து சேவையில் ஈடுபடாது.

குறித்த பகுதிகளின் டிப்போக்கள் ஊடாக டீசல் விநியோகம் செய்யப்படாத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply