இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லையென மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் இன்று (6) முதல் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இன்று முதல் பேருந்து சேவைகள் மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டு, 5000 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்





