ரஷ்ய விமான விவகாரம் தனிப்பட்ட சட்டப் பிரச்சினை! ரணில்

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பிரச்சினை தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அத்தோடு இந்த பிரச்சினை குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி, அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான சேவைகளையும் டிக்கெட் விற்பனையும் குறித்த ரஷ்ய நிறுவனம் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply