திலிப் வெதாராச்சி எம்.பியின் முன்மாதிரியான செயல்

இன்றைய தினம் தமது மகன் மற்றும் மருமகள் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகனான தங்காலை முன்னாள் நகர முதல்வர் ரவிந்து வெதாராச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதுகாப்பற்ற முறையில் கெப்ரக வாகனத்தின் பிற்பகுதியில் குளிர்சாதனபெட்டியை ஏற்றி தெற்கு அதிவேக வீதியில் பயணிப்பதற்கு முயற்சித்திருந்தனர்.

இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் அவர்களை தடுத்துள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் பொலிசாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

அதிவேக வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியும் கோரப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சந்தேகநபருக்கு தங்குமிடத்தை வழங்கிய மாத்தறை – பதலவத்தை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவர் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply