ரஷ்ய விமானம் விவகாரம்: திறந்த நீதிமன்றுக்கு மாற்றுங்கள் – சட்டமா அதிபர் மனு

ஏரோஃப்ளொட் ரஷ்ய விமானம் குறித்த வழக்கை திறந்த நீதிமன்றுக்கு மாற்ற அனுமதிக்குமாறு கோரி, சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த விமானம், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டது.

குத்தகை பிரச்சினை காரணமாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்த பயணிகள் நேற்று ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பிரச்சினை காரணமாக, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வணிக விமான சேவைகளை ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.

Leave a Reply