
தியாகி பொன் சிவகுமாரின் 48 ஆவது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அவரின் சகோதரி சமூகம் மீடியாவுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
எங்கள் குடும்பம் தமிழில் ஆர்வம் உள்ளவர்கள்.எனது தந்தை பாடசாலையின் அதிபர். சத்தியாகிரக போராட்டங்கள் நடைபெறும் போது எனது தந்தை எங்கள் அனைவரையும் அங்கே அழைத்துச் செல்வார்.
இதனால் எனது சகோதரனுக்கு தமிழ்மீதும் மக்கள் மீதும் அக்கறை அதிகமாக காணப்பட்டது.
கல்வியிலும் இவர் சிறந்து காணப்பட்டார்.படிப்பில் கெட்டிக் காரர்.அன்றைய காலத்தில் பல்கலைக் கழகத்தில் அனுமதி கிடைப்பது கடினம்.
தமிழர் ,சிங்களவர் ,முஸ்லீம் என வீதங்கள் பிரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும்.இதனால் கெட்டிக்கார தமிழ் மாணவர்களுக்கு கூட பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதில்லை.
அதன் பின்னரே மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது.அதன் பின்னர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
அவர்களின் எண்ணம் தமிழர்களை காட்டிக் கொடுக்கும் கும்பலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே ஆகும்.அதன் பின்னர் அவரை கொலை செய்வதற்கு முயற்சிகள் பல மேற்கொண்ட நிலையில், இறுதியில் சயினட் அருந்தி உயிரிழந்தார்.
இவரை பிடித்துத் தந்தால், பணப் பரிசு வழங்கப்படும் என பொலிஸார் அன்று அறிவித்தனர்.அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது சிவகுமாருடன் சேர்த்து ,பலர் நின்றனர்.
காட்டிக் கொடுக்கப்பட்டமையால் தான் அவர் அன்று சிக்கிக்கொண்டார். எனினும் அந்த தருணத்தில் துப்பாக்கியை பறித்து ,அதிகாரியை மிரட்டுவதற்கு முயற்சித்த வேளை ,தனக்கு 5 பிள்ளைகள்,அம்மா இல்லை என அந்த அதிகாரி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ,தானே சயினட் அருந்தி உயிரை மாய்த்தார் என்றார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்





