
உணவுப் பஞ்சம் ஏற்படும் போன்ற விடயங்களை வைத்து மக்களை பீதியடையச் செய்யும் நிலையை அரச உயர்மட்டத்தில் உள்ளவர்கள் அறிக்கையிடுவது சரி வராது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புத்தளத்தில் இன்று (6) இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மக்களை பீதியூட்டாமல் பதற்ற நிலைக்கு தள்ளாது ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள பக்குவமாக கையாள வேண்டும். வெளிநாட்டு உதவிகளை பெறுவதற்காக எப்படி கையாள்கிறார்களோ அதே போன்று மக்களை அபாய நிலைக்குள் தள்ளி விடுகின்ற அறிக்கைகளை விடாது பதற்ற நிலையை இல்லாது செய்ய வேண்டும்.
எதிர்கட்சிகளாகிய நாங்கள் நாட்டை காப்பாற்றுவதற்கு ஆதரவு நல்குவோம்.ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க தற்போதைய புதிய அரசாங்கமும் செயற்படுகிறது.
இதனை இல்லாமல் ஆக்கி மக்களுடைய கருத்துக்களுக்கு செவிசாய்த்து கால க்கெடு வழங்கி ஜனாதிபதியை பதவி விலக்க வேண்டியதுதான் சரியான தீர்வு தீர்வின்றி நீண்ட வரிசை உணவு பஞ்சம் என மக்களை பதற்றத்துக்கு உள்ளாக்குகின்றனர். என தெரிவித்தார்.





