
அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் அபாய எச்சரிக்கை!
இரண்டு வாரங்களுக்கு போதுமானளவு அரிசி மட்டுமே கையிருப்பில் உள்ளது. போதியளவு நெல் கிடைக்காமையால் பல அரிசி ஆலைகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் நேற்றுத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாள்களில் அரிசி ஏற்றிக் கொண்டு லொறிகள் பாதையில் செல்லவும் முடியாத நிலை ஏற்படலாம். ஏனெனில் பஞ்சத்தில் இருக்கும் பொதுமக்கள் ஒன்று திரண்டு அடித்து பறித்துக்கொண்டு சென்று விடுவார்கள் என்றும் அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் அச்சம் வெளியிட்டது.
மறுபுறத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள், வங்கிகளில் பெற்றுக் கொண்ட கடன்களை திருப்பி செலுத்த வழியின்றி, வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை திருப்பி ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டது.





