ரஷ்ய விமான விவகாரம்; முன்னாள் தூதர் இலங்கைக்கு எச்சரிக்கை!

ரஸ்யா விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விமானத்தை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் ரஸ்யாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த விமான விவகாரம் இருநாட்டு அரசாங்கத்திற்கு இடையிலான பிரச்சனை அல்ல என நேற்றையதினம் பிரதமர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply