பால்மா விலை மீண்டும் எகிறும்!

பெறுமதி சேர் வரி உள்பட சில வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், கட்டாயம் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என்று தேசிய மற்றும் வெளிநாட்டு பால்மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு பெறுமதி சேர் வரி அறவிடப்படுவதில்லை. எனினும் பால்மாவுக்கு இந்த வரி அறவிடப்படுமா அல்லது இல்லையா என்பதை அரசாங்கம் உறுதியாக தெரிவிக்கவில்லை.

பால் மாவுக்கு பெறுமதி கூட்டல் அறவிடப்படா விட்டாலும் விசேட சந்தை பொருள் வரி உட்பட சில வரிகள் கொண்டு வரப்பட்டுள்ளதால், மீண்டும் ஒரு முறை பால் மாவின் விலைகளை அதிகரிக்க நேரிடும்.

மேலும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபா மதிப்பிழந்துள்ளமையும் விலைகள் தொடர்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ரூபாவின் பெறுமதி 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில், பால் மாவின் புதிய விலைகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. எனினும் விரைவில் 50 சதவீதத்தால் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படக் கூடும் என்று பால்மா நிறுவனங்கள் தெரிவித்தன.

Leave a Reply