
யாழில் இன்றைய தினம் நடைபெற்ற அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் அங்குராப்பணத்தில் விவசாயத்துறை எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவடடத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதி மு.இரவிச்சந்திரன் கருத்து தெரிவித்திருந்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் ;
தற்போதைய அரசாங்கம் விவசாயத்தில் ஏற்படுத்திய புரட்சியில் சரியான கருத்துக்கணிப்பு ஒழுங்காக செய்யப்படவில்லை. கொரோனா என்ற கொடிய நோய் நாட்டில் வந்து பெரும் பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அரசாங்கம் எடுத்த விடயங்களின் பாதிப்பினையே தற்போது நாம் அனுபவிக்கின்ற இந்த பொருளாதார சிக்கலுக்கு காரணம்.
இலங்கை மக்களின் முதுகெலும்பாக காணப்படுவது விவசாயமாகும். ,இந்த விவசாயத்தில் எடுக்கின்ற அரசாங்கம் எடுக்கின்ற எந்த திடடச்செயன்முறைகளும் அடிமடட சமூகத்துக்கு சென்று சேரவும் இல்லை
அத்துடன் எந்த பயனும் கிடைக்கவில்லை . இதனால் கீழ் மடடத்திலுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பினை எதிர்கொள்ளகிறார்கள்.
மேலும் ,நீர்ப்பிரச்சனை, உரப்பிரச்சனை மற்றும் காட்டு யானைகள் தொல்லை போன்ற பிரச்சனைகள் விவசாயிகள் எதிர்கொள்ளகிறார்கள்,.
வட ,கிழக்கில் உள்ள குளங்கள் புனரமைக்க வேண்டும். இதுவரை காலமும் இதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை .இன்றுவரைக்கும் வட மாகாண மக்கள் நிறைய கஷடங்களை ஏந்திக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எந்தவிதமான நலத்திட்ட்ங்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை .இனி செய்யப்போவதுமில்லை . முல்லைத்தீவு மாவடடத்தின் முதுகெலும்பாக விவசாயம் ,விலங்கு வேளாண்மை,சிறுகைத்தொழில் மற்றும் மீன்பிடி ஆகும், நிலத்தடி நீரினை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு டீசல்,மண்ணெண்ணெய் ,மின் சக்தி தேவைப்படுகிறது ஆனால் தற்போது இவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்யக்கூடிய சூழ்நிலை இல்லை.
முதல் பிரச்சனையாக நீர் உள்ளது .தற்போதைய பிரச்சனை தான் உரப்பிரச்சனை ,எனவே காலப்போக்கில் இதற்கு இசைவாக்கம் அடைந்து விடுவோம்.எனவே குளங்களை புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் ,யுவதிகள் ஆகியோர் எந்த தொழிலினை செய்வது என்ற குழப்பத்தில் உள்ளார்கள். களவு ,கொலை,கற்பழிப்பு போன்ற அடாவடிகளும் நடக்கின்றன. விவசாயத்துறை மாத்திரம் அல்ல எல்லாத்துறைகளுமே பாதிக்கப்படுகின்றது என்றார்





