நாட்டு மக்களை சாகச் சொல்லும் ரணில்; சுமந்திரன் எம்.பி ஆரூடம்! – (வீடியோ இணைப்பு )

நாட்டு மக்கள் பட்டினியால் சாவுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் அறிவிப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டு நிலைமை தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு,கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்கும் போது மக்கள் மூன்று வேளை மக்கள் சாப்பிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.அதன் பின்னர் இரண்டு வேளை சாப்பிடுங்கள் என்கிறார்.இன்னும் 3 மாதங்களில் பட்னியால் சாவுங்கள் என்று சொல்லுவார்.

அரிசி உற்பத்தியை உள்ளுரிலே உற்பத்தி செய்யமால்,வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததன் விளைவு இப்போது தெரிகிறது.

அன்றே நாம் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.

இப்போது திடீர் என்று அதை நோக்கி நகருங்கள் என்றால் பல ஆண்டுகள் தேவை.ஆகவே நாடு திண்டாடப் போகின்றது.

இறக்குமதி என்று நாம் பார்க்கும் போது,அதற்கு அந்நிய செலாவணி அவசியம்.எமது நாட்டில் அந்நிய செலாவணி பூச்சியமாக உள்ளது.

21 ஆவது திருத்தும் வரப்போகிறது என்று கூறுகிறார்கள்.அது பாராளுமன்றுக்கு சமர்பிக்கப்படும் போது,இறுதி நேரத்தில் இரட்டை பிரஜா உரிமை வேண்டும் என்று பெரமுன எம்.பிக்கள் நிற்பார்கள் என்றார்.

Leave a Reply