ரணிலை – பசில் இடையே சந்திப்பு

கொழும்பு, ஜுன் 06

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (06) இடம்பெற்ற இந்த சந்திப்பில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 20 உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கியது யார் என்பது தெரியாது என பிரதமரும் நீதி அமைச்சரும் அங்கு கூறியதாக தெரிய வருகிறது. இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அவரது பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் அல்லது அந்தப் பதவிக்கு புதிய நியமனம் செய்ய வேண்டும். ஜனாதிபதி மட்டுமே அவரது பதவிக் காலத்தை நீடிக்க அல்லது புதிய ஒருவரை நியமிக்க முடியும். அதற்கு நிதியமைச்சர் என்ற முறையில் பிரதமரின் பரிந்துரையை பெற வேண்டும்.

Leave a Reply