
மத்திய வங்கி ஆளுனருடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித விரோதங்களும் இல்லை என்று பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். இவ்வாறு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்கவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விரோதங்களை கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.அதன் காரணமாக அவரை விலக்கிவிட்டு தினேஷ் வீரக்கொடியை புதிய ஆளுனராக நியமிப்பதில் ரணில் முயற்சி செய்வதாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வௌியாகியிருந்தன.





