அமைச்சர் பிரசன்ன ரணதுங்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறை!

தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சருக்கு 25 மில்லியன் அபராதம் விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம், 1 மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

25 மில்லியன் அபராதத்தை அமைச்சர் செலுத்தத் தவறினால் மேலும் 9 மாதங்கள் தண்டனையுடன் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதவேளை 1 மில்லியன் இழப்பீடு வழங்கத் தவறினால், அவருக்கும் மேலும் 3 மாதங்கள் தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரின் மனைவி மற்றும் மற்றுமொருவர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply