உச்சத்தை தொட்ட ரின்மீன்!

நாட்டில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் மக்கள் தமது வாழ்க்கையினை கொண்டு செல்வதில் பெரும் இன்னல்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சந்தையில் ரின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு முட்டைஇ இறைச்சிஇ கருவாடு மற்றும் காய்கறிகளின் விலை உயர்வால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

ரின் மீன் விலை அதிகரிப்பு தொடர்பில் விநியோக நிறுவனமொன்றின் தலைவர் ஒருவர் கூறுகையில்,

அனைத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளதால் பெரிய செமன் ரின் ஒன்றின் விலை 750 ரூபா வரையில் அதிகரிக்கலாம் என தெரிவித்தார்.

Leave a Reply