ஏரோஃப்ளோட் விமானம் விடுவிக்கப்பட்டமை குறித்து அமைச்சர் நிமல் வெளியிட்ட தகவல்

ஏரோஃப்ளோட் விமானம் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தீர்வு ஒரு இராஜதந்திர வெற்றி என்றும், நீண்டகால ரஷ்ய – இலங்கை நட்புறவை உறுதிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பயணிகளுக்கும் அவர்களின் பயணப் பொதிகளுக்கும் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின், பிரச்சினை ஏற்படாதவாறு நீதித்துறையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply