சிகிரியாவில் அமெரிக்க சுற்றுலாப் பயணியை தாக்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்!

சிகிரியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவரை அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் திட்டி தாக்கியுள்ளார்.

இது தொடர்பில் சிகிரிய சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உத்தியோகத்தர் பல்கலைக்கழக மாணவனை தாக்கிய வேளை, அதனைத் தவிர்க்க முற்பட்ட போது, அவர் தரையில் வீழ்ந்து இரண்டு விரல்களில் காயமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த மாணவன் தனது கையடக்கத் தொலைபேசியில் சிகிரிய அப்சரஸ்களின் புகைப்படங்களைப் படம் பிடிக்கச் சென்ற போதே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று சீகிரியாவுக்கு விஜயம் செய்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply