யாழ் விவசாயிகளுக்கு இன்று மண்ணெண்ணை விநியோகம்

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது என யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிபிள்ளை மகேசனின் அறிவுறுத்தலின் பிரகாரம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

மேலும், பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அண்மையில் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டது.

அந்த அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்றும் நாளையும் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply