இலங்கையின் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் நன்றிகள்! ரஷ்யா தெரிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் நேற்று மொஸ்கோ நோக்கி பயணித்திருந்தது.

கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் கடந்த 02 ஆம் திகதி வழங்கிய தடையுத்தரவை இடைநிறுத்தியதன் மூலம் குறித்த விமானம் நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் மொஸ்கோ நோக்கிய பயணித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் ரஷ்ய வௌியுறவுத்துறை அமைச்சு நேற்று அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தது.

குறித்த அறிக்கையில், விமானம் தடுத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply