தேனீ மாற்றாற்றல் அமைப்பினரால் விழிப்புணர்வு நடவடிக்கை

பொது போக்குவரத்தில் மாற்றாற்றல் உடையவர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த கோரி விழுது அமைப்பின் அனுசரணையில் தேனீ மாற்றாற்றல் அமைப்பினரால் விசேட விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் பிரதான பேரூந்து நிலையத்தில் இடம் பெற்றது

இதன் போது அரச மற்றும் தனியார் போக்குவரத்து பேரூந்துகளில் மாற்றாறல் உடையவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசணங்களில் பிரத்தியோக ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன் மாற்றாற்றல் உடையவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் அடையாளப்படுத்தப்பட்டன

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரச அதிபர் ஸ்ரான்லி டிமேல் விழுது அமைப்பின் மாவட்ட இணைப்பாளர்,தேனீ அமைப்பின் உறுப்பினர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் ஸ்ரிக்கர்களையும் காட்சிப்படுத்தியமை குறிப்பிடதக்கது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply