காணாமல்போன இரண்டு யுவதிகளும் கண்டுபிடிப்பு!

அக்கரபத்தனையில் விறகு தேடச் சென்றிருந்த நிலையில், கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு யுவதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கொழும்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பாதமையால் அக்கரப்பத்தனை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் 15 மற்றும் 18 வயதுகளையுடைய பெண்களாவார்.

மேலும் குறித்த இருவரும் கொழும்பில் இருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply