பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் பெறுமதி சேர் வரி விதிப்பில் இருந்து விலக்களிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட தரப்பிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்படாத நிலையில், பணிஸ் ஒன்றின் விலை 100 ரூபாவை விட அதிகரிக்குமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்





