யாழில் குளவி கொட்டி முதியவர் உயிரிழப்பு!

யாழ். பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.

அப்பகுதியை சேர்ந்த சூசைப்பிள்ளை சகாயராசா (வயது 64) என்பவரே உயிரிழந்தார்.

குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, சடுதியாக குளவிகள் இவரை கொட்டிய நிலையில், மயக்க மடைந்த அவரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply