
சென்னை, ஜூன் 07
இம்மாதம் 9-ம் திகதி சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ”தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்” எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் திகதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளது.





