ஒரு மாதத்திற்குப் பின் புத்தளத்தில் மண்ணெண்ணை விநியோகம்

புத்தளம் எரிபொருள் நிலையத்தில் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு 6500 லீற்றர் மண்ணெண்ணை இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டதாக எரிபொருள் நிலைய முகவரொருவர் தெரிவித்தனர்.

மண்ணெண்ணையைப் பெற்ற்கொள்வதற்கு மக்கள் இன்று அதிகாலை முதல் நீண்டவரிசையில் காத்து நிற்பதை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில் வீட்டுப் பாவனைக்கும் கடற்தொழிலாளர்களுக்கும் 500 ரூபாவிற்கு மாத்திரமே மண்ணெண்ணை வழங்கப்படுவதாக எரிபொருள் நிலைய முகவரொருவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply