ரணிலுக்கும் எனக்கும் எவ்வித முரண்பாடும் இல்லை – மத்திய வங்கி

<!–

ரணிலுக்கும் எனக்கும் எவ்வித முரண்பாடும் இல்லை – மத்திய வங்கி – Athavan News

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ ருவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஆளுநருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை இலங்கை மத்திய வங்கி அறிந்துள்ளதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய வங்கி ஆளுநர் இத்தகைய கூற்றுகளை கடுமையாக நிராகரிப்பதோடு, பிரதமரும் ஆளுநரும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு தொடர்ந்தும் நல்லிணக்கத்துடன் செயற்படுகின்றனர் என்றும் அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Review


Leave a Reply