பாடசாலைக்கு சென்ற 13 வயது சிறுமி மாயம்

கொஸ்கம சாலாவ தோட்டத்தில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவி மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமி கடந்த 5ஆம் திகதி காலை 8 மணியளவில் தான் கல்வி கற்கும் பாடசாலையில் சிரமதானம் இருப்பதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தாய் பொலிஸில் புகார் அளித்துள்ளார்

இந்த சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கொஸ்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply