பிரித்தானிய மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி நிகழ்வில் இலங்கை படையினர்

பிரித்தானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை இராணுவத்தினர் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி போட்டியில் கலந்துகொண்டனர்.

2022ஆம் ஆண்டில், பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் 70 வருட சேவைக்குப் பிறகு பிளாட்டினம் ஜூபிலியைக் கொண்டாடிய முதல் பிரித்தானி ராணி ஆவார்.

ராணியின் நினைவாக ஜூன் 02 முதல் 05 வரை நடைபெற்ற கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது இராணுவ காட்சி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உட்பட பல பிரிவுகளை உள்ளடக்கியது.

போட்டி நிறைவடைந்ததும், இலங்கை இராணுவக் குழு இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்ததுடன், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, முப்படையினருக்கு இந்தப் போட்டியில் பங்குபற்றியமைக்காக நன்றி தெரிவித்தார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply