கைது செய்வதை தடுக்குமாறு கோரி ஜோன்ஸ்டன் ரிட் மனு தாக்கல்

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

9 ஆம் திகதி கொழும்பில் பதிவாகியிருந்த அமைதியின்மை தொடர்பான வழக்கின் சந்தேக நபராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து சி.ஐ.டியினர் கடந்த ஒரு வாரமாக அவரை வலைவீசி தேடிவருகின்ற போதும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply