சம்பிக்க தனிவழி

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்பட தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் தனது ஆதரவாளர்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று அல்லது நாளை அவர் விசேட அறிவிப்பு ஒன்றை விடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை எதிரணியில் இருந்து அரசுக்கு ஆதரவு வழங்க அவர் உத்தேசித்துள்ளார்.

Leave a Reply