மின்சார இணைப்பு பெறாத வறிய குடும்பங்களுக்கு இலவச மண்ணெண்ணெய்!

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரினால் மக்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மின்சார இணைப்பு பெறாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வீட்டுத் தேவைக்காக இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் திட்டம் இன்று முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (08) காலை குச்சவெளி பிரதேச சபையின் புல்மோட்டை உப அலுவகத்தில் வைத்து குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில், இலவச மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர்களான . எஸ்.ஏ.சீ.எம்.நசார், ஏ. பஸ்மீர், புல்மோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், இலங்கை இராணுவ படை உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply