வேலைநிறுத்த போராட்டம்: தடங்கலைத் தவிர்க்க பேச்சுவார்த்தை

ஜூன் மாதத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தங்களைத் தவிர்ப்பதற்கு ரயில்வே நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது.

ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய திகதிகதிகளில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ரயில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் நிறுவனங்கள் இதுவரை நடந்த விவாதங்களில் ஊதியம் மற்றும் வேலைப் பாதுகாப்பு குறித்த “உறுதியான முன்மொழிவுகள்” எதையும் செய்யவில்லை என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இடம்பெறவுள்ள வேலைநிறுத்த போராட்டம் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply