யாழில் ஓய்வுபெற்ற இளம் ஆசிரியர் தீயில் எரிந்து மரணம்!

எரிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான பிரபாகரன் பிறேமலதா (41) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை தீயில் எரிந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடுத்துறை பகுதியை சேர்ந்த மேற்படி பெண், திருமணம் முடித்து யாழ் நகரை அண்மித்த பகுதியில் குடியிருந்தார்.

அண்மைக்காலமாக தீவிரமாக நோய்வாய்ப்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனால், ஆசிரியர் பணியிலிருந்தும் ஓய்வுபெற்றார்.

சுகவீனமுற்ற நிலையில் தாயார் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இன்று தீயில் எரிந்தார்.

வீட்டு, அறைக்குள் பெற்றோல் வைக்கப்பட்டிருந்தது. நோயின் தீவிரத்தில் தனக்குத் தானே தீமூட்டினாரா அல்லது விபத்தா என்பது தொடர்பில் மருதங்கேணி பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply