தமிழக அரசுக்கு கச்சதீவு சொந்தமாக போகிறதா? சுரேஸ் கேள்வி

கச்சத்தீவு தொடர்பாக தமிழக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க. சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழக அரசு கச்சதீவினைப் பெற்றுக்கொள்ளப்போகிறதா? இலங்கை அரசாங்கம் அதனை கொடுப்பதற்கு தயாராக உள்ளதா? என்ற பல கேள்விகளுக்கு நாம் பதில் காண வேண்டியுள்ளது.

எனவே இதனை பிரச்சனையாக மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை.

கச்சதீவினை இலங்கை அரசாங்கம் கொடுக்கும் எனில், அதற்கு தமிழ் மக்களுடைய ஒப்புதல் குறித்து பேச வேண்டும். ஆகவே இதற்கான எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை.

இந்த விடயமானது ஊடகங்களின் பேசுபொருளாக காணப்படுறதே தவிர, இரு அரசாங்கமும் இது குறித்து வாய் திறந்து பேசவில்லை என்பதே யதார்த்த உண்மையாகும்.

எனவே எடுகோள்களை ஒரு பிரச்சனையாக எடுக்க வேண்டாம், அப்படியாக இருக்கட்டும் – என்றார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply