யாழில் இந்திய அரசின் உதவி திட்ட உணவுப்பொருள் விநியோகம் 2ம் கட்டம் நாளை ஆரம்பம்!

இந்திய அரசின் இலங்கை மக்களுக்கான உணவுப்பொருள் விநியோகம் -2ம் கட்டம் நாளை ஆரம்பமாவதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் உதவித்திட்டத்திட்டத்தின் கீழ் 2ஆம் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறும் 450000 கிலோகிராம் அரிசி நாளை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் கிடைக்கப்பெறவுள்ளது.

இவ் உதவித்திட்டமானது 11 பிரதேசசெயலக பிரிவுகளைச் சேர்ந்த 9000 குடும்பங்களுக்கு பகிந்தளிப்பதற்காக குறித்த பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply