நிலக்கரியில் மின் உற்பத்தி நிலையங்கள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முழுமையான பங்களிப்பு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர்மின் உற்பத்தி சிலவற்றின் தொழிற்பாடுகள் செயலிழந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் கெனியோன் ஆகிய 5 நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன.

இதன்காரணமாக குறித்த நீர்மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்க பெறும் 300 மெகாவொட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply