வடக்குகிழக்கு நிலங்களை கைப்பற்றி விவசாயம் செய்யும் படையினர்! செல்வம் எம்.பி சுட்டிக்காட்டு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்த உணவுகள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பது தொடர்பாக நாடாளுமன்றில் தெளிவுப்படுத்தப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை வடக்குகிழக்கில் இன்று படையினர் நிலங்களை கைப்பற்றி விவசாயம் செய்கின்றார்கள்.

அத்துடன் படையினர் மக்களை தொடர்ந்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள் என்றும் குறிப்பிட்டார்

முப்படையினர் அதிகமாக உள்ள இடங்களிலேயே அதிகளவான கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இது ஒரு அடக்குமுறையாகும் என்றும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply